அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மூட்டையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மூட்டையில் மனித உடல் இருப்பதாகப் பெருங்குடி காவல்துறையினருக்குத் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விரைந்து வந்தார். அப்போது ஆய்வு செய்ததில் மூட்டையில் 35 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் உடலிலிருந்தது தெரியவந்தது.
பெண் சடலம்
நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அந்த மூட்டைக்குள் 35 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது.மேலும் முகங்கள் சேதமடைந்து அடையாளம் காண்பது சிரமம் இருப்பதாதல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூட்டையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.