ரயில் பயணிகளே கவனம்; அடுத்த 7 நாட்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!
ரயில்வே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போக்குவரத்து
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கூடல்நகர் -சமயநல்லூர், மதுரை- கூடல்நகர், மதுரை -திண்டுக்கல் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
எனவே, செப்.20 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை இந்த ரயில்வே பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை ரயில் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை அதாவது வருகின்ற 24-ஆம் தேதி மற்றும் வருகின்ற 1-ம் தேதிகளை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
முக்கிய மாற்றம்
மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-ஈரோடு ரயில் வருகின்ற 8-ம் தேதி வரை அதாவது வருகின்ற 25, 2 தேதிகளை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கு ஈரோடுக்கு செல்கின்றது. குருவாயூரில் இருந்து நள்ளிரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வருகின்ற 23, 25, 26, 27 மற்றும் அடுத்த மாதம் 2,3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 6.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் வருகின்ற 26 அடுத்த மாதம் 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமாரியிலிருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்படும் கன்னியாகுமாரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் வருகின்ற 8-ம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மட்டுமே இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் வருகின்ற 28ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படும்.
மதுரையிலிருந்து நண்பகல் 11:55 மணிக்கு புறப்படும் மதுரை- பிகானீர் வாரந்திர அனுராபத் எக்ஸ்பிரஸ் வருகின்ற 26 அடுத்த மாதம் 3 தேதி ஆகிய நாட்களில், மதுரை மானாமதுரை, காரைக்குடி வழியாகவே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.