கணவரை இழந்த பெண்ணை தான் கல்யாணம் செய்தேன் - மதுரை முத்து வேதனை!
கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டது குறித்து மதுரை முத்து மனம் திறந்துள்ளார்.
மதுரை முத்து
ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த புகழ் பெற்ற காமெடியன் மதுரை முத்துவை தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். சிறு வயதில் இருந்தே பேச்சின் மீது ஆர்வம் இருந்ததால், பல மேடை நிகழ்ச்சியில் பேசி உள்ளார். தொடர்ந்து, விஜை டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
மேலும், குக் வித் கோமாளி ஷோ மூலமாக இன்னும் மக்களிடம் நெருக்கமாகியுள்ளார். இவரது முதல் மனைவி 2016ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். அதன் பின் அவர் உயிரிழந்த சில மாதங்கிளேலேயே மனைவியின் தோழியான பல் மருத்தவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி
இதனால் பல விமர்சனங்களுக்கும் ஆளானார். ஆனால், தனக்கு வயதான பெற்றோர் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தன் முதல் மனைவி லேகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது.
அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அப்போது நான், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினேன். அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். ஆனால், இந்த திருமணத்திற்கு என்னுடைய வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை.
பலரின் எதிர்ப்பை மீறித்தான் லேகாவை திருமணம் செய்து கொண்டேன். ஆசை ஆசையாக வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், அது பாதியில் முடிந்துவிட்டது வேதனை தெரிவித்துள்ளார்.