எது மதுரை முத்து ஆட்டோ டிரைவர் ஆகிட்டாரா? என்னவா இருக்கும்?
புகழ்பெற்ற காமெடியன் மதுரை முத்து ஆட்டோ ஓட்டுனராக நடித்து அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த புகழ் பெற்ற காமெடியன் மதுரை முத்துவை தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.
தற்போது குக் வித் கோமாளி ஷோ மூலமாக இன்னும் மக்களிடம் பிரபலமாகி நெருக்கமாகியுள்ளார்.
மதுரை முத்து தற்போது சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவரது ஹோம் டூர், கார் டூர், கார்டன் டூர் என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஆட்டோ டிரைவர் போல மதுரை முத்து காமெடி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"ஆட்டோ டிரைவர் ஆனார் மதுரை முத்து" என அவரே வீடியோவுக்கு டைட்டிலும் வைத்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.