பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம்!
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து
மதுரை, அழகுசிறை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதில் வழக்கம் போல் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் விரைவாக வெளியேறினர். இருப்பினும் 5பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
நிவாரணம்
அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.