இடிக்கப்படும் மதுரையின் 2 அடையாளம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
பெரியார், நக்கீரர் நுழைவாயில்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து இடையூறு
மதுரையில் 4 நுழைவாயில்கள் உள்ளன. அதில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவாயில் அலங்கார வளைவும், பெரியார் அலங்கார வளைவும் பழமையானவை.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அளித்த புகாரின் பேரில் அதனை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பி.பி.குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இதுகுறித்த பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
தொடர்ந்து மதுரை மாநகராட்சி தரப்பில், " நுழைவு வாயில்களை அப்புறப்படுத்துவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த நுழைவாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை.
ஆகவே 6 மாதங்களுக்குள்ளாக மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நக்கீரர் நுழைவு வாயில் மற்றும் கேகே நகர் பகுதியில் உள்ள பெரியார் நுழைவாயில் ஆகியவற்றை அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நுழைவாயில்களை அமைத்துக் கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.