300 சவரன் போட்டா மருமகள்; இல்லை வேலைக்காரி - கொடுமையால் பெண் விபரீத முடிவு?

Madurai Crime Death
By Sumathi Sep 01, 2025 07:27 AM GMT
Report

வரதட்சணை கொடுமையால், பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வரதட்சனை கொடுமை

மதுரையை சேர்ந்த ரூபன் ராஜ். இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினுக்கும் திருமணம் நடைபெற்றது.

ரூபன் ராஜ் - பிரியதர்ஷினி

அப்போது பெண் வீட்டார் 300 சவரன் வரதட்சனை வழங்குவதாக உறுதியளித்து 150 சவரன் நகை வழங்கியுள்ளனர். தொடர்ந்து 150 சவரன் நகையை கேட்டு மாப்பிளை வீட்டார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் தற்போது பிரியதர்ஷினி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

மனைவி-மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை - கொடூர சம்பவம்!

மனைவி-மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை - கொடூர சம்பவம்!

பெண் தற்கொலை

உடனே மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சை பலனின்றி பிரயதர்ஷினி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை உடனடியாக கைதுசெய்யக்கோரி பெண் வீட்டார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

300 சவரன் போட்டா மருமகள்; இல்லை வேலைக்காரி - கொடுமையால் பெண் விபரீத முடிவு? | Madurai Dowry Case Woman Suicide

இது தொடர்பாக அவரது கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தன்பாக்கியம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.