நிச்சயம் முடிந்த மகள்; காதலனுடன் சென்றதால் விரக்தி - உயிரை மாய்த்த பெற்றோர்!
தம்பதி விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
மதுரை, அயன்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மனைவி வான்மதி. இவர்களுக்கு மகன், மகள் என 2 பிள்ளைகள் உள்ளனர்.
கணவன் மனைவி இருவரும், திடீரென விஷமருந்திய நிலையில் மயங்கிக் கிடந்திருக்கின்றனர். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பெற்றோர் தற்கொலை
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரித்ததில், மகளுக்கு உறவினர் ஒருவரைத் திருமணம் செய்யப் பேசி முடித்திருக்கின்றனர். ஆனால், மகளோ வேறொருவரைக் காதலித்திருக்கிறார்.
அது தெரிந்து கண்டித்தும், மகள் கேளாமல் காதலனோடு சென்றுவிட்டதாகவும், அதனால் சில நாள்களாக இருவரும் மன உளைச்சலில் இருந்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.