பணம் கேட்டு டார்ச்சர் செய்த பெண் - மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவவீரர் தற்கொலை!
முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பிரச்சனை
மதுரை, ஆவின் நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மனைவி விசாலினி, 12 வயது மகள் ரமிஷா ஜாஸ்பல் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. தொடர்ந்து, துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தற்கொலை
உடனே சம்பவ இடம் விரைந்தவர்கள், சென்று பார்த்ததில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகள் ஆகியோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்திய நிலையில் சடலமாக கிடந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததில் நஷ்டம் ஏற்பட்டு, அதனால் கடன் அதிகமானதால் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.