குலுங்கியது மதுரை..!சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Madurai Festival
By Thahir May 03, 2023 05:02 AM GMT
Report

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை சித்திரை திருவிழா 

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

Madurai-Chitrai Chariot Festival

இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் 11-வது நாளான இன்று மேலமாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.

தேரோட்டம் 

அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட பெரிய தேரில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். அதே போல சிறிய தேரில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Madurai-Chitrai Chariot Festival

பிரமாண்ட தேர் கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி என நான்கு வீதிகளின் வழியே செல்கிறது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மதுரைக்கு பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் உள்ளனர்.