மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் SPG பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

Madurai Draupadi Murmu
By Thahir Feb 15, 2023 09:24 AM GMT
Report

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் SPG பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் 

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 18-ம் தேதி முதல்முறையாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வரும் ஜனாதிபதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

spg-security-team-inspects-meenakshi-amman-temple

பின்னர், கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு, வரும் 19-ம் தேதி கோவையில் இருந்து மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசுத் தலைவரான பின்னர் திரவுபதி முர்மு முதல்முறையாக தமிழகம் வருவதா ல், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SPG பாதுகாப்பு குழுவினர் ஆய்வு 

பாதுகாப்பு தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனால், குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் நேரடியாக கோயிலு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.