மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை விவகாரம்
நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் பகுதிகளில் சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8500 ஏக்கர் 99 ஆண்டுகளுக்கு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக குத்தகைக்கு அளிக்கப்பட்டது.
அங்கு ஏராளமான தொழிலாளரான பணியாளர்களும் உள்ளனர். இந்த குத்தகை வரும் 2028ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது. குத்தகை முடிவையும் நிலையில், தாங்கள் மீண்டும் பணியை தொடரும் முனைப்பில் இல்லை என்றும் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக விருப்ப ஓய்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த நோட்டீஸ் தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்து மாஞ்சோலையை சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இம்மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவித்து, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.