மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்? முக்கிய தகவல்!

Narendra Modi Government Of India Madurai
By Sumathi Dec 09, 2024 03:13 AM GMT
Report

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை எய்ம்ஸ்

கடந்த 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறி 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

madurai aiims

தொடர்ந்து கடந்த மார்ச் 14-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது.

இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி, பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி இவ்வளவுதானா ? - வெளியான அதிர்ச்சி தகவல்

மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி இவ்வளவுதானா ? - வெளியான அதிர்ச்சி தகவல்

 ஆர்.டி.ஐ தகவல்

இதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் அளித்த பதிலில், மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவுக்கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்? முக்கிய தகவல்! | Madurai Aiims To Be Opened By 2027

சென்னையைச் சேர்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1,118.35 கோடிக்கு (ஜி.எஸ்.டி. வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கட்டிடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டிடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.