மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைந்து தொடங்க வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.
அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே அப்படியே இருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இது தான் என உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பணிகளை செயல்படுத்த நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு முழு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.