பருவம் தவறி மழை பெய்வதற்கு இளைஞர்களே காரணம் - மதுரை ஆதினம்
பருவம் தவறி மழை பெய்வதற்கு இன்றைய இளைஞர்களே காரணம் என மதுரை ஆதினம் என தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதினம்
வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225 வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தொடர்ந்து மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை" என கூறினார்.
பருவம் தவறிய மழை
மேலும், "இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பெய்வதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம்" என தெரிவித்துள்ளார்.