சீமான் சொன்னாரு..தமிழ் ஈழம் வேண்டும் பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன்!! மதுரை ஆதீனம்
பிரதமர் மோடியிடம் தமிழர்களுக்காக தமிழ் ஈழம் கேட்பேன் என கோரிக்கை வைத்துள்ளார் மதுரை ஆதீனம்.
தமிழ் ஈழம்
பிரதமர் மோடி மீண்டும் 3-வது முறை ஆட்சிக்கு வந்ததை குறித்து மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார். அவர் அதில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இலங்கையில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்றுவிட்டார்களே என்ற வருத்தம் தான் எனக்கு.
அதனால் தான் அவர்களால் மத்தியில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார்.அவருக்கு 2 கோரிக்கை வைக்கிறேன்.
அன்று இந்திரா காந்தி தூக்கி கொடுத்துட்டாங்க. கச்சத்தீவை மீட்க தமிழ்நாட்டோடு இணைக்கும். ஈழத்தில் இருக்கும் மக்களை பாதுகாக்க தமிழ் ஈழம் உருவாக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகள் தான்.
அண்ணாமலைக்கு அங்கீகாரம்
இப்போதாவது தமிழ் ஈழம் குறித்து பேசுறாங்களே. 60 வருசமா பேச கூட இல்லையே. மோடி பிரதமரானதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. சீமான், விடுதலை சிறுத்தைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அண்ணாமலைக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். எல்லாருக்கும் சரி சமமாக கொடுத்துள்ளார்கள்.
இலங்கை தமிழர்களுக்கு ஓட்டு போட்டது மட்டும் தான் வருத்தம். வெற்றி பெற்றவர்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். சீமான் என்னிடம் தனி நாடு வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் என கூறினார், அதனை தான் நானும் கூறுகிறேன்.