சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் - காவல்துறைக்கு நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கு
கடந்த 2022ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்டது .
இந்த வழக்கின் விசாரணை விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ,வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
ரத்து செய்த நீதிமன்றம்
அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோதலை ஏற்படுத்துதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?” என காவல் துறையினரை கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த வழக்கை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ,இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது .அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திர சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.