அதிமுக அலுவலகத்தில் இருந்த வெள்ளி வேல், செங்கோல்கள் காணவில்லை - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

ADMK
By Nandhini Jul 21, 2022 08:11 AM GMT
Report

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதகரமான நிலையில் கடந்த 11- ந் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து வருவாய்துறையினர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி,மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தனர்.

சாவியை வழங்க உத்தரவு

இதையடுத்து நேற்று பிற்பகல் வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் நீதிபதி அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதுமான காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு அனுமதிக்க கூடாது என்றும் தீர்ப்பளித்தார்.

சீல் அகற்றப்பட்டது

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அகற்றினார். சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியின் மேனேஜரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் கடந்த 11ம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம் குற்றம்

இந்நிலையில், அதிமுக தலைமை கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் -

அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது. கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமாகி இருக்கிறது. காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை என்றார். 

c-v-shanmugam-admk