கோகுல்ராஜ் கொலை வழக்கு - யுவராஜூக்கு ஆயுள் தண்டனை உறுதி!
கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோகுல் ராஜ் கொலை
சேலம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.
ஆயுள் தண்டனை
அப்போது அவர் பிறழ் சாட்சி அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குள்ளானது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு, “கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை” என்று கூறி யுவராஜ் உள்ளிட்டோருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.