15 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்-வெளியான அதிர்ச்சி தகவல்!

Crime Madras High Court
By Vidhya Senthil Sep 12, 2024 11:40 AM GMT
Report

பல ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 கல்யாண ராணி

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர் திருமணத்துக்காக ஆன்லைன் செயலி மூலம் மணப்பெண் தேடி போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

15 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்-வெளியான அதிர்ச்சி தகவல்! | Madras Hc Bail Granted To Kalyanarani Sathy

திருமணத்தின் போது மணப்பெண் சத்யாவுக்கு 12 பவுன் தங்க நகைகளை மணமகன் வீட்டர் அணிவித்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர் மகேஷ் அரவிந்த், மனைவி சத்யாவின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார்.

அப்போது அதில், ஆண்கள் சிலருடன் சத்யா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடடைந்தார். இது குறித்து சத்யாவிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சத்யா திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

தகாத உறவில் உல்லாசம் - இடையூறாக இருந்த கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி !

தகாத உறவில் உல்லாசம் - இடையூறாக இருந்த கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி !

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த், இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் சத்யா திருமணம் செய்து ஏமற்றிவிட்டதகவும் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்துவிட்டார். பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

ஜாமின்

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் காவல் துறையினர், தொழில் அதிபர் என  15 பேரை  திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது.

15 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்-வெளியான அதிர்ச்சி தகவல்! | Madras Hc Bail Granted To Kalyanarani Sathy

இதனையடுத்து புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் 60 நாட்களுக்கு மேலாகச் சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தனபால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .

இந்த வழக்கில் காவல்துறை உரியக் காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதைக் காரணம் காட்டி சத்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.