சிறை காவலரிடமே நூதன முறையில் பணம் பறித்த வடமாநில கும்பல் - அதிர்ச்சி சம்பவம் !
புழல் சிறை காவலருக்கு குறுஞ்செய்தியை அனுப்பி நூதன முறையில் வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர்கள் பணம் பிறித்துள்ளனர்.
நூதன முறையில் பணமோசடி
செல்போனில் அழைத்து வாங்கி கணக்கு விவரங்களை கேட்டு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரிசு பொருட்களை அனுப்புவதாகக் கூறி கொடுத்த பணத்திற்கு குறைவான மதிப்புள்ள பொருட்களை அனுப்பியும் பணம் பணம் பறிப்பில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப்பற்றி அறியாத வயதான நபர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து தொடர்ந்து பணத்தை இழந்து வருகின்றனர். இப்படி நூதன முறையில் மோசடியில் ஈடுபடுவர்கள் அதிகமாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காவலரிடம் பணம் பறிப்பு
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் காவலராக பனி புரிந்து வரும் ஜெயசீலன் என்பரியமே கொள்ளையர்கள் தங்களது கை வரிசையை காட்டியுள்ளனர். அவரின் செல்போனுக்கு வாங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
அப்போது அந்த குறுஞ்செய்தியிலுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து உள்ளே போய் தனது வாங்கி மற்றும் பான் கார்டு விவரங்களை ஜெயசீலன் அளித்துள்ளார். அந்த நொடியே அவரின் வாங்கி கணக்கில் இருந்து 13700 ரூபாயை கொள்ளையர்கள் பிறித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் ஜெயசீலன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.