'Miss America' அழகிப்போட்டியில் முதல் விமானப்படை அதிகாரி - யார் இந்த அழகி..?

United States of America World
By Jiyath Jan 13, 2024 07:37 AM GMT
Report

மேடிசன் மார்ஷ் என்ற அமெரிக்க விமானப் படை அதிகாரி மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில் போட்டியிடவுள்ளார்.

மேடிசன் மார்ஷ்

அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் வசித்து வருபவர் மேடிசன் மார்ஷ் (22). சிறுவயதிலிருந்தே பைலட்டாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த மேடிசன், விமானப்படை அகாடமியில் இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.

பட்டம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு 2023ல் `மிஸ் கொலராடோ அழகிப் பட்டம்’ வென்றார். இதனையடுத்து ஹார்வர்டு கென்னடி பள்ளியில், பப்ளிக் பாலிசி (Public Policy) பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

800 ஆண்டுகளுக்கு முந்தைய 'தங்க ராஜா'; உலகின் பெரும் பணக்காரர் - சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி!

800 ஆண்டுகளுக்கு முந்தைய 'தங்க ராஜா'; உலகின் பெரும் பணக்காரர் - சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி!

அழகிப்போட்டி

மேலும், செகண்ட் லெப்டினன்டாக விமானப் படை பிரிவில் சேர்ந்த அதேவேளையில் மிஸ் அமெரிக்க அழகிப் போட்டிக்கான பயிற்சியும் பெற்று வந்தார்.

இந்நிலையில் மேடிசன், இன்று மற்றும் நாளை (ஜனவரி 13,14) நடக்கும் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில் 49 போட்டியாளர்களுடன் இணைந்து போட்டியிடவுள்ளார்.

இதனால் அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்து கொண்டு அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதல் விமானப்படை அதிகாரி என்ற பெருமையை மேடிசன் பெற்றுள்ளார்.