800 ஆண்டுகளுக்கு முந்தைய 'தங்க ராஜா'; உலகின் பெரும் பணக்காரர் - சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி!

Africa World
By Jiyath Jan 13, 2024 04:33 AM GMT
Report

800 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த, உலகின் பெரும் பணக்காரரான பேரரசர் "மான்சா மூசா" பற்றிய தகவல்.

மான்சா மூசா

14-ம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும், வாஸ்ட் மாலி என்ற நாட்டை ஆண்ட பேரரசர் "மான்சா மூசா". 1280-ம் ஆண்டு பிறந்த இவர் 1312-ம் ஆண்டு அந்நாட்டின் அரசராக முடி சூட்டிக் கொண்டார்.

800 ஆண்டுகளுக்கு முந்தைய

அவரின் ஆட்சிக்குட்பட்ட நாட்டின் எல்லை தற்போதைய ஐவரி கோஸ்ட், செனகல், மாலி மற்றும் புர்கினோ பாசோ வரை நீண்டிருந்தது. அப்போதே மான்சா மூசாவின் சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32 லட்சம் கோடி). அவரின் முக்கிய வருமானம் தங்கம் மற்றும் உப்பு ஏற்றுமதி தான்.

தங்கத்தையும் உப்பையும் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார். 1324-ம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு, மான்சா மூசா புனித பயணம் மேற்கொண்டது வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 5 நாடுகளில் மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்; சராசரி வயதே 80 - என்ன காரணம்..?

இந்த 5 நாடுகளில் மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்; சராசரி வயதே 80 - என்ன காரணம்..?

தாராள குணம்

இந்த பயணத்தில் 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் மற்றும் ஏராளமான தங்கத்தை தன்னுடன் கொண்டு சென்றிருக்கிறார். மேலும், தனக்கு பணிவிடை செய்ய 12,000 வேலைக்காரர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

800 ஆண்டுகளுக்கு முந்தைய

அதோடு தன்னுடன் 8,000 பேரை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் இவ்வளவு சொத்துகளும் மான்சா மூசாவிற்கு பெருமையை தேடித்தரவில்லை. அவருக்கு பெரும் புகழையும், பெயரையும் தேடித்தந்தது அவருடைய தாராள குணம் தான். வாரி வழங்கும் வள்ளலான மூசாவை அவரின் குடிமக்கள் அரசருக்கு எல்லாம் அரசர் என்று தான் அழைப்பார்களாம்.

தன்னைத் தேடி வருபவர்களுக்கு எல்லாம் தங்க கட்டிகளைத்தான் தானமாக கொடுப்பாராம். இன்றுவரை உலகின் பெரும் பணக்காரராகவும், இவரின் சொத்து மதிப்பை தாண்டி உலகில் இன்றுவரை சொத்து சேர்த்தவர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.