முகம் முழுவதும் முடி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞர் - யார் இவர்?
முகத்தின் அனைத்து பகுதிகளிலும் முடி முளைத்த நபர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பட்டிதார்.18 வயதாகும் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதாவது இவரது முகத்தில் 95% முடி காணப்படுகிறது.
உடலெங்கும் அளவுக்கு அதிகமாக முடி வளரும்.இது 100 கோடி பேரில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்று கூறப்படுகிறது . மரபியல் வேறுபாட்டால் ஏற்படுபவை ஆகும்.
கின்னஸ் சாதனை
இந்த நோயால் லலித் பட்டிதார் தனது சிறுவயத்தின் பள்ளி பருவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் மற்றவர்களுக்காக தனது முக அமைப்பை அவர் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
மேலும் தற்போது அவர் யூடியூபராகவும் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.