காங்கிரஸ் பக்கம் சாய்ந்த 87% முஸ்லிம்கள்!! ஆட்சியை இழக்கிறதா பாஜக?? வெளியான சர்வே ரிப்போர்ட்!!

Indian National Congress BJP Madhya Pradesh
By Karthick Oct 29, 2023 12:30 PM GMT
Report

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில தேர்தல்கள் நடைபெறவுள்ளது. 

மத்திய பிரதேச தேர்தல் அரசியல்

இதற்காக இரு முக்கிய தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த 5 மாநிலங்களில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.  

அம்மாநிலத்தின் முதல்வராக ஷிவ்ராஜ் சிங் சவுகான் இருந்து வருகின்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 109 இடங்களையும், பாஜக 114 இடங்களையும் பெற்ற நிலையில், பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.

madhya-predesh-election-entry-poll-favour-congress

ஆனால், காங்கிரஸ் பகுஜன் சமாஜ்வாதி கட்சி, சமாஜ்வாதி கட்சி போன்றவற்றுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. இருப்பினும் சில காலம், 2020-இல் 22 காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ'க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்தனர்.

பிரதமராகும் லட்சியமா...?? முதல் முறை பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின்!!

பிரதமராகும் லட்சியமா...?? முதல் முறை பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின்!!

அதன் பிறகு நடைபெற்ற அரசியல் நகர்வுகளுக்கு பிறகு, பாஜக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததுடன், இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக்கொண்டது. பெரும் அரசியல் சூழ்ச்சிகள் இந்த பரபரப்பில் இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து கொண்டது பாஜக.  

யாருக்கு ஆதரவு

தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் இது போன்ற எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல், ஆட்சியை மீண்டும் தங்கள் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகின்றது. இந்நிலையில் தான் அம்மாநில சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது. 

madhya-predesh-election-entry-poll-favour-congress

அதில், அம்மாநிலத்திலுள்ள பிராமணர்கள் 80 சதவீதத்திற்கும் மேலானோர் பாஜகவிற்கே வாக்களிப்பார்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என அறியப்படுகிறது.

மேலும், அம்மாநிலத்தில் அதிகளவிலுள்ளராஜபுத்திர வாக்காளர்கள் 72 சதவீத  பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதமும், 68 சதவீத பனியா வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 14 சதவீதமும் வாக்களிப்பார்கள் என கூறப்படுகிறது.

madhya-predesh-election-entry-poll-favour-congress

இவற்றையடுத்து, முஸ்லீம்களின் வாக்குகளில் 87 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கே வரும் என்றும் மீதமுள்ள தலித்துகளில் 44 சதவீதம் பேர் பாஜகவுக்கும் 40 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கக் கூடும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.