தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!
மனைவி மற்றும் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து தந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வருபவர் ஹரேந்திர மவுரியா.இவர்அந்த பகுதியில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி தன்னுடைய 2 மகள்களின் திருமணத்தை நடத்தியுள்ளார்.
அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஹரேந்திர மவுரியா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலிருந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஹரேந்திர மவுரியா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீடியோ
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதற்கிடையே ஹரேந்திர மவுரியாவின் 3 மகள்களும் சேர்ந்து, பெற்ற தகப்பனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் மவுரியாவின் மனைவி, அவரது கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள, அவரது மகள்கள், நீளமான கம்பு எடுத்து, அப்பாவை அடித்துத் தாக்குகிறார்கள்.இதில் வலி பொறுக்க முடியாமல் அழுதுகொண்டே கதறுகிறார் மவுரியா.இது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.