ரயிலை சிறைபிடித்த பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் - யார் இவர்கள்?
ரயிலைச் சிறைபிடித்த பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பலுசிஸ்தான்
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்குப் பயணிகள் ரயிலை ஒரு குழு சிறைபிடித்தது. இந்த அமைப்பு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தானை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி இனைத்துக் கொண்டது. அதன் பின்னர் கலாட் மாநிலத்தின் இளவரசர் கரீம் தலைமையில் போராட்டக் குழு உருவானது.
யார் இவர்கள்?
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் பலுசிஸ்தானின் சுதந்திரம் தான். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது.
பலுசிஸ்தானின் வளங்களின் மீது தங்களுக்கே முதல் உரிமை இருப்பதாகக் கூறி வரும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தானை பாகிஸ்தான் மற்றும் சீன அரசாங்கத்தின் செல்வாக்கிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடி வருகிறது.