காலை தேர்தல் - நள்ளிரவில் தீப்பற்றி எறிந்த வாக்கு பெட்டிகளை கொண்ட பஸ்! அதிர்ச்சி தகவல்
மத்திய பிரதேசத்தில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்ற பஸ் நேற்றிரவு தீப்பற்றி எரிந்துள்ளது.
எரிந்த பஸ்
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் பஸ்ஸை ஓட்டி சென்ற ஓட்டுனர் போன்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் பஸ்'ஸில் இருந்த ஒருசில வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தீப்பொறி
இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் கோலா கிராமத்திற்கு அருகில் இரவு 11 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து பெத்துல் மாவட்டத்தின் கலெக்டர் நரேந்திர சூர்யவன்ஷி கூறுகையில், தீப்பொறியால் பஸ் தீப்பிடித்து எரிந்தது என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பெண்களால் நிர்வகிக்கப்பட்ட 1,043 வாக்குச் சாவடிகள் உட்பட 20,456 வாக்குச் சாவடிகளில் 62.75% வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.