மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வர்..? யார் இந்த மோகன் யாதவ்..?
மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக உஜ்ஜைன் தெற்கு எம்எல்ஏ மோகன் யாதவை அதிகாரப்பூர்வமாக நியமித்து பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச தேர்தல்
வட இந்திய மாநிலகங்களில் பெரிய மாநிலமாக கருதப்படும் மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. 230 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் 163 இடங்களை பிடித்து பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது.
மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை எளிதாக கடந்து மிகவும் எளிதாக ஆட்சியை தக்கவைத்து கொண்டது. கடந்த முறை முதல்வராக இருந்து சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் ஆவாரா..? அல்லது வேறு யாரும் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற கேள்விகள் பெருமளவில் எழுந்தது.
யார் இவர்..?
தேர்தல் முடிவுகள் வெளியாகி 1 வார கால கடந்த நிலையில், இன்று அந்த சஸ்பென்ஸிற்கு பாஜக முடிவு கட்டியுள்ளது. உஜ்ஜைன் தெற்கு எம்எல்ஏ'வான மோகன் யாதவ் அம்மாநிலத்தின் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். மோகன் யாதவின் அரசியல் வாழ்க்கை கடந்த 2013- இல் துவங்கியது.
முதல்முறையாக 2013-இல் MLA' வாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர் பின்னர் 2018-இல் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசாங்கத்தில், ஜூலை 2, 2020 அன்று கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்.