திருமண ஊர்வலம்:லாரி மோதி 6 பேர் பலி; 12 பேர் படுகாயம் - அதிர்ச்சி வீடியோ!

Accident Madhya Pradesh Death
By Sumathi Mar 12, 2024 03:56 AM GMT
Report

திருமண ஊர்வலத்தின் போது லாரி மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

திசைமாறிய லாரி

மத்திய பிரதேசம், கமரியா கிராமத்தில் திருமண ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, போபால் நகரில் இருந்து ஜபல்பூர் செல்லும் சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது.

madhya pradesh

அது திடீரென எதிர்பாராத வகையில் தவறான திசையில் சென்ற நிலையில், திருமண ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பே படுகாயமடைந்தனர்.

லாரி மோதி ஒருவர் பலி... 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள்...

லாரி மோதி ஒருவர் பலி... 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள்...

6 பேர் பலி

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், சம்பவம் நடந்ததும் லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தற்போது இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீஸார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.