ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் உடல்நலக்குறைவால் காலமானார். மாதவராவ் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
மாதவராவ் காங்கிரஸ் கட்சியில், 1986 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர், தேசிய காங்கிரஸ் இளைஞரணி செயலாளர், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.
மாதவராவ் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.