அந்த நடிகையைத் தான் திருமணம் செய்ய விரும்பினேன் - பல வருடங்களுக்குப்பின் மனம் திறந்த மாதவன்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நடிகை குறித்து மாதவன் பேசியுள்ளார்.
மாதவன்
அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் மாதவன். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
சமீபத்தில் மாறா, ராக்கெட் விளைவு திரைப்படங்களில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவுடன் இணைந்து தி ரயில்வே மேன் என்ற நெட்பிளிக்ஸ் சீரிஸில் நடித்துள்ளார். இந்த சீரிஸ் குறித்து நெட்பிளிக்ஸ் புரொமோ விடியோவில் பேசியுள்ள மாதவன்,
திருமண ஆசை
"ஜூகி சாவ்லா இந்த தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லோரிடமும் ஒரு வாக்குமூலத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஜூகி சாவ்லா கயாமத் சே கயாமத் தக் படத்தை பார்த்த பின்னர் எனது தாயாரிடம் ஜூகி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் எனக் கூறினேன்.
அப்போது எனக்கு அதுவே இலக்காக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார். மாதவனின் மகன் வேதாந்த் தற்போது நீச்சல் சாம்பியனாக உள்ளார். மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video