“நீ சொந்தக் காலிலே நில்லு.. இது அப்பன் சொல்லிய சொல்லு” - தன் மகனுக்காக நடிகர் மாதவன் செய்த செயல்!

swimmer actor madhavan settles in dubai for son vedanth 2026 olympics
By Swetha Subash Dec 20, 2021 08:17 AM GMT
Report

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக நடிகர் மாதவன் திடீரென குடும்பத்துடன் துபாய்-க்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். ஆரம்ப காலத்தில் கோலிவுட்டின் சாக்லெட் பாயாக இருந்த அவர், தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

நடிப்பில் பெரும் புகழை எட்டியுள்ள மாதவனின் மகன் வேதாந்த், விளையாட்டு துறையில் சாதித்து வருவது தான் ஆச்சரியமான விஷயம்.

நடிகர் மாதவனுக்கு 16 வயதில் வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் வீரரான இவர், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார்.

இதே போல லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்.

இந்நிலையில் வேதாந்தின் அடுத்தகட்ட இலக்கிற்காக குடும்பத்தினருடன் துபாய்-க்கு குடிபெயர்ந்துள்ளார் மாதவன்.

2026ம் ஆண்டு ஒலிம்பிக் போடியில் தகுதி பெற வேதாந்த் தீவிராமாக உழைத்து வருகிறார். ஆனால் அவரின் பயிற்சிகளுக்கு ஏற்ற நீச்சல் குளங்கள் சரிவர அமையவில்லை எனத்தெரிகிறது.

மும்பையில் உள்ள பெரும் நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டது. எனவே வேதாந்த்-க்கு பயிற்சி கொடுப்பதற்கான நீச்சல் குளங்கள் துபாயில் திறந்துள்ளதால், அவரை அங்கு அனுப்ப முடிவு செய்தனர்.

எனினும் குறைந்தது 4 ஆண்டுகள் அங்கு இருக்க வேண்டியிருக்கும் என்பதால் குடும்பத்தையே அங்கு அழைத்து சென்றுவிட்டார் நடிகர் மாதவன்.

இதுகுறித்து பேசிய அவர், என் மகன் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து பெருமை சேர்த்து வருகிறார்.

அவர் 2026ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக நாங்கள் துபாய்-க்கு வந்துவிட்டோம்.

அவருக்கு தேவையான உதவிகளை நானும், எனது மனைவி சரிதாவும் செய்து வருகிறோம் என மாதவன் கூறியுள்ளார்.