மனைவியை விரட்ட சதி செய்வாங்க; விடக்கூடாது - மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி!
மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் பதிவு வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு தன் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில், ஸ்ருதி தனது இன்ஸ்டா பதிவில்,
ஸ்ருதி வைரல் பதிவு
வெளியாள் ஒருவர் வந்து ட்ரிக்ஸ் செய்து சட்டப்பூர்வமான மனைவியை விரட்டப் பார்த்தால் விடக் கூடாது. இதே பாதையில் பயணித்த அனைத்து சட்டப்பூர்வமான மனைவிகளுடன் நான் இருக்கிறேன். நெவர் கிவ் அப். எனக்கு அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நானும், என் குழந்தைகளும் பட்ட கஷ்டம் தெரியாமல் விமர்சித்தவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜட்ஜ் பண்ணாமல் மரியாதையுடன் நடந்து கொள்ள மெச்சூரிட்டி கற்றுக் கொடுத்திருக்கிறது.
அனைத்து குடும்பங்களிலும் பிரச்சனைகள் இருக்கும். ஆனால் அதை எல்லாம் சேர்ந்து கடந்து வர முயற்சி செய்வோம். ஒற்றுமையே வலிமை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதி தற்போது வைரலாகி வருகிறது.