ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஹுசைன்; குவிந்த விமர்சனம் - மணிமேகலை பதிலடி!
ஹூசைன் ஐயப்பனுக்கு மாலை அணிந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஐயப்பனுக்கு மாலை
கடந்த 2017-ம் ஆண்டு நடன இயக்குநர் ஹுசைனை காதலித்து பிரபல தொகுப்பாளினி மணிமேகலை திருமணம் செய்துக்கொண்டார்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணம் என்பதால் பல்வேறு எதிர்ப்புகளை மீறி கரம்பிடித்திருந்தனர். ஒவ்வொரு முறை ரம்ஜான் வரும்பொழுதும், ஹுசைன் உடன் இணைந்து மணியும் முறையாக நோன்பிருந்து பண்டிகையை கொண்டாடுவார்.
நெகிழ்ச்சி பதிவு
ஹூசைனும் மாலையும் கழுத்துமாக நெற்றியில் திருநீருடன் இந்து பண்டிகைகளின் போது காணப்படுவார். இந்நிலையில், தற்போது ஹுசைன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கிறார்.

திருநீர் அணிந்து ஐயப்ப கோஷத்துடன் தான் மாலை போட்ட காணொளியை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ‘சுவாமியே சரணம் ஐயப்பா என குறிப்பிட்டுள்ளார். மணிமேகலையின் பக்ரீத் 2025 கொண்டாட்ட பதிவும் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில், மணிமேகலை ‘காதலை கடந்த மிகப்பெரிய மதம் எதுவும் இல்லை’ எனக்குறிப்பிட்டுள்ளார். இது பல்வேறு தரப்பிலும் இருந்து அன்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது