அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய்க்கு டஃப்.. இப்போ புத்த துறவி - யார் தெரியுமா?
பிரபல நடிகை சினிமா வாழ்க்கையைத் துறந்து புத்த துறவியாக வாழ்ந்து வருகிறார்.
பர்கா மதன்
பர்கா மதன் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். மிஸ் டூரிசம் பட்டத்தை வென்றவர். 1996ல் அக்சய் குமார் ஹீரோவாக நடித்த 'கிலாடியோன் கா கிலாடி' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
தொடர் வெற்றி படங்களில் நடித்த இவருக்கு புத்த மதத்தின் மீது ஈடுபாடு அதிகமானது. இதற்கிடையில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக 2010ல் சோச் லோ, 2014ல் சுர்காப் ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்து நடித்திருந்தார்.
புத்த துறவி
இதற்கு பின் துறவியாக மாறத் தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து தலாய் லாமாவின் தீவிர விசுவாசியாக இருந்து திபெத்திய மடத்தில் துறவியாக வாழத் தொடங்கினார்.
தற்போது திபெத் மற்றும் நேபாளத்தில் வசித்து வருகிறார். அதோடு தனது பெயரான பர்கா மதன் என்பதை மாற்றி கியால்டன் சாம்டென் என்கிற பெயருடன் வலம்வருகிறார். 1994 மிஸ் இந்தியா போட்டி வரலாற்று சிறப்புமிக்கது.
இதில் வெற்றியாளர்களான சுஷ்மிதா சென் மற்றும் ஐஸ்வர்யா ராய் பின்னாளில் உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் இவர்களுக்கு போட்டியாக இருந்தவர் பர்கா என்பது குறிப்பிடத்தக்கது.