உலகின் முதல் சைவ பாடிபில்டர்; மாரடைப்பால் மரணம் - என்ன நடந்தது?

Heart Attack Punjab Death
By Sumathi Oct 10, 2025 03:24 PM GMT
Report

நடிகர் வரீந்தர் குமான் மாரடைப்பால் மரணமடைந்தார்.

நடிகர் வரீந்தர் 

பஞ்சாப், அமிருதசரஸை சேர்ந்தவர் வரீந்தர் குமான். இவர் உலகின் முதல் சைவ பாடி பில்டர் என கூறப்படுகிறார். 2012 ஆம் ஆண்டு "கபாடி ஒன்ஸ் அகைன்" எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

varinder

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார். மிஸ்டர் ஆசியா எனும் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

ஒரே கல்லூரியை சேர்ந்த 7 பேருக்கு எலிக்காய்ச்சல் - பின்னணி என்ன?

ஒரே கல்லூரியை சேர்ந்த 7 பேருக்கு எலிக்காய்ச்சல் - பின்னணி என்ன?

மாரடைப்பால் மரணம்

"ரோர்: டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பன்ஸ்", 2019ஆம் ஆண்டு "மர்ஜாவான்", 2023 ஆம் ஆண்டு டைகர் 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். வரீந்தரின் தோள்பட்டைக்கும் முழங்கைக்கும் இடையே உள்ள Biceps பகுதியில் பிரச்சினை ஏற்பட்டு அதற்காக அமிருதசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்.

உலகின் முதல் சைவ பாடிபில்டர்; மாரடைப்பால் மரணம் - என்ன நடந்தது? | Bodybuilder And Actor Varinder Dead Heart Attack

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் அவரது உயிர் பிரிந்தது.

இவரது இறப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரீந்தரின் தம்பியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.