மாதம்பட்டி கருவை கலைக்க சொன்னார்; என்னை அடித்தார் - ஜாய் கிரிசில்டா பகீர் புகார்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகாரளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
தமிழில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் கலை நிபுணராகவும் வலம் வருகிறார்.
ஸ்ருதி என்கிற பெண்ணுடன் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, எனக்கும் ரங்கராஜுக்கும் இடையே திருமணமாகிவிட்டது.
நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார் என காவல்நிலத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
2வது மனைவி புகார்
‘என்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது என்னுடன் வாழ மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்கிறார். எனக்கும் அவருக்கும் சென்னையில் திருமணம் நடந்து ஒன்றாக குடும்பம் நடத்தினோம். ஆனால் நான் கர்ப்பமான பிறகு என்னை பார்க்க வருவதை அவர் தவிர்க்கிறார்.
அவரை சந்திக்க இரண்டு முறை முயற்சி செய்தபோது அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். என்னுடன் சேர்ந்து வாழக்கூடாது என அவரிடம் இருப்பவர்கள் தடுப்பதாக கூறினார், மேலும் வயிற்றில் வளரும் கருவை கலைக்குமாறு கூறினார். எனக்கு கணவர் அவர்தான்.
என்னுடைய வயிற்றில் வளர்வது அவரின் குழந்தைதான். அவருடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என்னுடன் வாழ வேண்டும் என்று தான் அவரிடம் கோரிக்கை வைத்தேன். என்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது புகார் கொடுத்து இருக்கிறேன் அவரை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்பதை போலீசார்தான் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.