அதிரடியாக களத்தில் இறங்கிய Gen-Z - நாட்டை விட்டே தப்பி ஓடிய அதிபர்!

Africa
By Sumathi Oct 14, 2025 06:03 PM GMT
Report

அதிபர் நாட்டை விட்டு தப்பியோடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Gen Z போராட்டம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மடகாஸ்கர். அதன் அதிபரான ஆண்ட்ரி ரஜோலினா அண்மையில் தமது அமைச்சரவையை ஒட்டு மொத்தமாக பதவி நீக்கம் செய்தார்.

madagascar

அவரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அந்நாட்டில் உள்ள Gen Z தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இங்கு தண்ணீர் பஞ்சம், மின்சாரம் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல.. பெண் பிரதமருக்கு அட்வைஸ்!

அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல.. பெண் பிரதமருக்கு அட்வைஸ்!

ஓடிய அதிபர்

பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, ராணுவ புரட்சி ஏற்படும் சூழல் காணப்படுவதாக தகவல்கள் எழுந்த நிலையில்,

அதிரடியாக களத்தில் இறங்கிய Gen-Z - நாட்டை விட்டே தப்பி ஓடிய அதிபர்! | Madagascar President Left Country Gen Z Protest

திடீரென நாட்டை விட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தப்பியோடிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சிடேனி ராண்ட்ரியானா சோலோனியாகோ அறிவித்துள்ளார். மேலும், நாங்கள் அதிபர் மாளிகை அலுவலக ஊழியர்களை அழைத்தோம்.

அவர்கள் அதிபர் நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தினர் என்றார். பிரெஞ்ச் ராணுவ விமானத்தின் மூலம் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.