நேற்று பேசினேன் - இன்று மறைந்து விட்டார்!! மாயி பட இயக்குனர் மரணம் - சரத்குமார் இரங்கல்

Sarathkumar
By Karthick May 27, 2024 04:25 AM GMT
Report

சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி படம் வெற்றி படமாக அமைந்தது.

மாயி

சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான படம் "மாயி". எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் சூப்பர் கூட்ஸ் தயாரித்த இப்படத்தை சூரியபிரகாஷ் இயக்கியிருந்தார்.

Sarathkumar Maayi movie

வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்த இப்படம் பின்னர் தெலுங்கு, கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு முன்பாகவே சூர்யபிரகாஷ் 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண், வனிதா ஆகியோர் நடித்த "மாணிக்கம்" என்ற படத்தை இயக்கியிருந்தார்.

Sarath kumar Diwan

மாயி படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் சரத்குமாருடன் திவான் என்ற படத்தில் இணைந்த சூரியபிரகாஷ்க்கு அது வெற்றி படமாக அமையவில்லை. அதனை தொடர்ந்து ஜீவன் நடிப்பில் அதிபர் என்ற படத்தை இயக்கினார்.

Sarathkumar

இதுவே அவர் இயக்கிய கடைசி படமும் ஆகும். இவர் இன்று காலை இயற்கை எய்துள்ளார். அவரின் மறைவை குறித்து நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,

சம்பவ இடத்திலேயே மரணம்....பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகர்!!

சம்பவ இடத்திலேயே மரணம்....பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகர்!!

இரங்கல் 

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.