நடிகை மீனாவின் கணவர் எப்படி உயிரிழந்தார்ன்னு தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி
நடிகை மீனா
நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
மகள் நைனிகா
நைனிகா அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நைனிகாவிற்கு தனது தாய் மீனாவை போலவே புகழை தேடி தந்தது.
நடிகை மீனா கணவர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வித்யாசாகர் மரணம் இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
பிரபலங்கள் இரங்கல்
மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து, நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி
நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் தான் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த கேள்விக்கு பதில் அளித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்தப் பேட்டியில், நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த 6 மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். உறுப்பு தானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.