படம் நல்லா இல்லனா அப்படி தான்..ரூ.120 சும்மா வரல - எம்.எஸ் பாஸ்கரை வெளுக்கும் ரசிகர்கள்!
எம்.எஸ் பாஸ்கரின் சர்ச்சை பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எஸ் பாஸ்கர்
தமிழ் சினிமா மிக பிரபலமான குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.காமெடி, வில்லன் என எந்த வேடம் கொடுத்தாலும் தந்து நடிப்பால் அசத்திடுவார்.ஆனால் அண்மையில் ஒரு இசை வெளியிட்டு விழாவில் அவர் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அதாவது நடிகர் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் லாந்தர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கலந்து கொண்டார்.அப்போது அவரது உரையில், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அது, "உங்களுக்கு ஒரு படம் பிடித்திருந்தால் அதனை 4 பேரிடம் கூறுங்கள்.
அதுவே ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை மற்றவர்களிடம் கூறி படம் பார்க்கச் செல்பவர்களைத் தடுக்காதீர்கள். எல்லாரும் படம் பார்க்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் 120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை. அனைவரும் வந்து படங்கள் பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று பேசினார்.
ரசிகர்கள்
இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவியதால், இணையவாசிகள் பலர் பாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன்கள் பலர்,120 ரூபாய் பணத்தை ஒவ்வொருவரும் மிகவும் கஷ்பட்டுத்தான் சம்பாதிக்கின்றனர்.
சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன், தனது பிரச்னைகளை மறந்து, தன்னை இந்த படம் கொஞ்சம் மகிழ்விக்கும் என நம்பிக்கொண்டு படம் பார்க்க வருபவனுக்கு நீங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தால் அவன் படம் நல்லா இல்லை என்றுதான் கூறுவான்" எனவும்,
ஒவ்வொரு 120 ரூபாயும் சேர்ந்துதான் படத்தின் வசூலைத் தீர்மானிக்கின்றது எனவும், உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்தால் 120 ரூபாய் என்பது பெரிய தொகையாகத் தெரியும், அதிகப்படியான சம்பளம் இப்படி பேச வைக்கின்றது எனவும், பாஸ்கர் வாங்கிக் கட்டிக்காத என இணையவாசிகள் பாஸ்கரைச் சாடியுள்ளனர்.