குடியரசுத் தலைவர் தேர்தல் - ஆதரவு திரட்ட அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார் யஷ்வந்த் சின்கா

M. K. Stalin
By Nandhini Jun 30, 2022 12:35 PM GMT
Report

குடியரசு தலைவர் தேர்தல்

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சமயம், பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சருடன் இன்று சந்திப்பு

எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து ஆதரவு கோர இருப்பதாக தகவல் வெளியானது. யஷ்வந்த் சின்ஹா அவர்களின் சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தது.

அண்ணா அறிவாலயம் வந்தார் யஷ்வந்த் சின்கா

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு திரட்ட அண்ணா அறிவாலயம் வந்தார் யஷ்வந்த் சின்கா. சென்னை வந்த யஷ்வந்த் சின்காவிற்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திட்ட உள்ளார் யஷ்வந்த் சின்கா. இது குறித்த கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

யஷ்வந்த் சின்கா தங்கவுள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுத்தியில் உயர் அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு - யஷ்வந்த் சின்கா இடையே பலத்த போட்டி நிலவ உள்ளது குறிப்பிடத்தக்கது.   

m.k.stalin

அன்புள்ள அண்ணா.. நீங்கள் ஒருங்கிணைப்பாளரே கிடையாது : ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் கடிதம்