தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி - சர்வதேச அளவில் தமிழ்நாடு விளங்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது -
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கி இருக்கிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி அறிவித்திருக்கிறோம். விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்பட்டது.
முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் தமிழ்நாடு அனைவராலும் உற்றுநோக்கும் மாநிலமாக விளங்கப்போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.