நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
பிரபல தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அறிமுகம்
நடிகர் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தாலும், இயக்குனர் சசியின் 'பூ' படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார், எனவே 'பூ' ராமு என்று அழைக்கப்பட்டார்.
ராமு, 'நண்பன்', 'சூரரைப் போற்று', 'கர்ணன்', 'பரியேறும் பெருமாள்', 'நீர்ப்பறவை', 'தங்கமீன்கள்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
மறைவு
தமிழ் சினிமாவில் துணை குணச்சித்திர நடிகரும் தெரு நாடகக் கலைஞரான பூ ராமு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.
முதலமைச்சர் இரங்கல்
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு அவர்க்ள உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவு கூர்வார்கள்.
பூ திரைப்படத்தின் வழியாக தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர்,நெடுநல்வாடை,பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாக தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.
தனது பயணத்தை நிறைவு செய்து கொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/RKhP75ixCv
— TN DIPR (@TNDIPRNEWS) June 27, 2022