தொழில்புரிய எளிதான மாநிலம் தமிழகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தொழில்புரிய எளிதான மாநிலம் தமிழகம்
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் பேசியதாவது -
நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் தான் அதிக தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.
தொழில் முனைவோர் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்படும். அனைத்து துறைகளும் தமிழக அரசு முன்னோக்கிய பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.
தொழில்புரிய எளிதான மாநிலங்களில் 14வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது. புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து 2 மாநாடுகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.