பிரான்சு நாட்டின் செவாலியே விருது - தேர்வான ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு பிரான்சு நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 30, 2022