எனக்கு எதற்கு விளம்பரம்? - 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக் கூடியவன் நான்... - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இன்று இராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, சுமார் 70,000 பயனாளிகளுக்கு சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
எனக்கு எதற்கு விளம்பரம்?
பின்னர் விழாவில் பேசியதமிழக முதலமைச்சர் பேசியதாவது -
தமிழகம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நரிக்குறவர், இருளர் வீட்டிற்கு போனார். அங்கு சாப்பிட்டார் என்ற செய்திகளை குறிப்பிட்டு ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள்.
எனக்கு எதற்கு விளம்பரம்? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக் கூடியவன் நான். இனிமேலும் விளம்பரம் தேவையா? அவர்களது வீட்டிற்கு சென்றதன் மூலம் ‘இது நமது அரசு’ என்பதை ஆழமாக விதைத்துள்ளோம். அதுதான் முக்கியம். அந்த சந்திப்பிற்கு பிறகு நிறைய நலத்திட்ட உதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!