சென்னைக்கு வாங்க..!குடியரசுத் தலைவருக்கு நேரில் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Chennai Draupadi Murmu
By Thahir Apr 28, 2023 08:55 AM GMT
Report

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பு 

இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என 3.06.2021 அன்று அறிவித்தார்.

M.K.Stalin personally called on the President

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு 

இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

M.K.Stalin personally called on the President

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் 5.06.2023 அன்று சென்னை கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார்.