பல மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகிறது - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று ஈரோட்டில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசியதாவது -
இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. பல மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. யாரோ ஒரு சில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.